உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு சக்கர வாகனங்களுக்கு லோன் எக்ஸ்சேஞ்ச் மேளா

இரு சக்கர வாகனங்களுக்கு லோன் எக்ஸ்சேஞ்ச் மேளா

கோவை: ஸ்ரீராம் பைனான்ஸ் சார்பில் கோவையில் இருசக்கர வாகனங்களுக்கான சிறப்பு லோன் மற்றும் எக்ஸ்சேஞ்சு மேளா நேற்று துவங்கியது.சத்தி ரோடு, புரோசன் மால், இரண்டாவது தளம் 201 அரங்கில் மேளா நடக்கிறது.ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ், ராயல் என்பீல்ட், சுசூக்கி, யமஹா, பஜாஜ், எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஓலா, ஐகியூப், போன்ற முன்னணி கம்பெனிகளின் வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட்டிரைவ், எக்ஸ்ளுசிவ் லோன் ஆபர்கள், எளிய எக்ஸ்சேஞ்ச், உடனடி லோன் அனுமதி, மிகக் குறைந்த முன்பணம், குறைந்த வட்டி மற்றும் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1,000 மதிப்புள்ள கிப்ட் கார்டு மற்றும் குலுக்கல் பரிசுகளும் உண்டு.துவக்க விழாவில், காவேரி குழும இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோரி மற்றும் எஸ்.வி.ஏ., குழும நிர்வாக இயக்குனர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். ஸ்ரீராம் பைனான்ஸ் பொது மேலாளர்கள் விஜயராகவன், வசந்தகுமார், அருண்குமார், பாலகுமார், துணை தலைவர் சரவணகுமார் மற்றும் மண்டல மேலாளர்கள் பிரபு, சிவராஜ் மற்றும் நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ