மேலும் செய்திகள்
தக்காளி மகசூலை அதிகரிக்க இயற்கை சாகுபடி ஆலோசனை
1 minutes ago
தினசரி மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவு
2 minutes ago
இன்றைய மின்தடை (24ம் தேதி)
4 minutes ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த நீண்ட துார ஓட்டப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ெஹல்த் சென்டர், கோவை தடகள சங்கம் சார்பில், கணைய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தையொட்டி நீண்டதுார ஓட்டப்போட்டி, நேற்று நடந்தது. புற்றுநோயாளிகளுக்கான நிவாரண நிதி சேகரிப்பு முயற்சியாக நடத்தப்பட்ட இப்போட்டியானது, 8 வயதுக்கு மேற்பட்ட இரு பாலருக்கு, 10 கி.மீ., 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர், 5 கி.மீ., ; 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, 2 கி.மீ. துாரம் உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டது. தவிர, 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு, 'வெட்ரான்' பிரிவும் அமைக்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் துவங்கி போட்டியில், 3,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வென்றவர்களுக்கு ரொக்கம், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சக்தி குழுமம் தலைவர் மாணிக்கம், என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் செயலாளர் சுப்பிரமணியன், கோவை சி.டி.ஏ.ஏ., ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், முன்னாள் மாணவர் சங்கம் மதிப்பியல் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
1 minutes ago
2 minutes ago
4 minutes ago