உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

சூலுார்; சூலுார் அருகே கிராவல் மண் கடத்திய லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.சூலுார் தாசில்தார் சரண்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நவீன்குமார் ஆகியோர் அவிநாசி ரோடு, அரசூர் பிரிவு அருகே வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அதில் சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தியது தெரிந்தது. மூன்று யூனிட் கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து சூலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி