லாட்டரி பறிமுதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கேரளா லாட்டரி விற்ற நபர் மீது, வழக்கு பதியப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 63, பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சட்டவிரோதமாக கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அவரிடம் விசாரணை செய்தபோது லாட்டரி விற்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து, 259 லாட்டரி சீட்டுகள் மற்றும் 3,500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.