மேலும் செய்திகள்
குறுவட்ட தடகளம்: கள்ளர் பள்ளி சாதனை
29-Jul-2025
கோவை; மதுக்கரை குறு மைய விளையாட்டு போட்டி, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கற்பகம் பல்கலை, நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. வாலிபால், கபடி, தடகளம் என, பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர். போட்டிகளின் முடிவில், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில் கலைவாணி மாடல் பள்ளி மாணவி நேத்ரா 15 புள்ளிகளுடனும், அதே பள்ளி மாணவி கேத்ரின் அமலா 15 புள்ளிகளுடனும் தனி நபர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், செயின்ட் ஆன்ஸ் பள்ளி மாணவி ஹர்ஷினி, சாதனா ஆகியோர் தலா 15 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றனர். 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலைவாணி பள்ளி மாணவி கவுசிகா 15 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் வியன் வீணை பள்ளி மாணவர் கிரிதிஷ், 13 புள்ளிகளுடனும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வெள்ளலுார் என்.எம்.சி., பள்ளி மாணவர் ஷெரிப் அப்துல் கலாம், 13 புள்ளிகளுடனும் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றனர். தவிர, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலைவாணி பள்ளி மாணவர் ரோகித், 11 புள்ளிகளுடன் தனிநபர் சாம்பியன்ஷிப் வென்றார். மாணவர்கள் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை (100 புள்ளிகள்) நிர்மல மாதா மெட்ரிக் பள்ளி, மாணவியர் பிரிவில் கலைவாணி மாடல் மெட்ரிக் பள்ளி (176 புள்ளிகள்) வென்றன.
29-Jul-2025