உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து சித்ரவதை

ஆம்னி பஸ் டிரைவரை கட்டிவைத்து சித்ரவதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் ஸ்டாண்டில் தனியார் நிறுவனங்களின் 20க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒரு பஸ் நிறுவன அலுவலகத்தில் காரைக்குடியைச் சேர்ந்த டிரைவரின் இரு கைகளையும் பின்புறமாக ஜன்னலில் கட்டி வைத்து மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். அதில், டிரைவரிடம் 'நீ என்னென்ன செஞ்சேனு சொல்லிடு. எங்கிருந்து எவ்வளவு டிக்கெட் ஏத்துன. இனி உன்னை மதுரையிலே பார்க்கக்கூடாது' என மிரட்டிய நபரிடம், 'அண்ணே, திருப்பதியில் இருந்து நாகர்கோவிலுக்கு டிக்கெட் போட்டு 4 பேரை ஏற்றினோம். 2,200 ரூபாய் வாங்கினோம்' எனக்கூறி கெஞ்சி அழுதவாறே கூறுகிறார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் கூறுகையில், 'மிரட்டிய நபர் தலைமறைவாகி விட்டார். டிரைவரும் வேலையை விட்டு நீக்கப்பட்டதால், எங்கு சென்றார் எனத் தெரியவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

lana
ஜூலை 25, 2024 17:54

driver செயல் தவறு . ஆனால் அவர் க்கு உரிய சம்பளமாக கொடுத்தால் அவர் ஏன் இதை செய்ய வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அதிக பணம் வசூல் செய்து கொடுப்பது இந்த டிரைவர் தானே.


S. Narayanan
ஜூலை 25, 2024 13:18

2011 ஏப்ரல் க்கு பிறகு திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. 2021 இல் எவ்வளவு பொய் சொல்ல முடியுமா அவ்வளவு பொய் சொல்லி ஆட்சியை பிடித்து விட்டது. ஸ்டாலினுக்கு வயதாகி விட்டதாலும் இனி மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க முடியுமா முடியாதா என்ற முடிவுக்கு வந்ததால் எல்லா துறையிலும் எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டி கொள்ளலாம் என்று முடிவு செய்து அதன் படி நடப்பதால் அவர்களுக்கு மக்கள் பற்றிய கவலை இல்லை. அதனால் பிரச்சனை வரும் போது அதை மற்றவர்கள் மீது சொல்வதே வாடிக்கை ஆகி விட்டது. இன்னும் இருக்கும் ஒரு வருடத்திற்குள் தமிழ் நாட்டை விற்று விடவும் செய்வர். அதனால் திமுக இருக்கும் வரை விடியல் கிடையாது.


VARADARAJAN NARAYANASAMY
ஜூலை 25, 2024 16:30

True


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 25, 2024 12:04

ஜூலை 16 அன்று தினமலரில் வெளிவந்த திருக்குறள் செய்தி. பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை. குறள்எண்: 657 இப்படியும் ஒரு திருக்குறள் இருக்கிறது. பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் அவசியம் சொல்லிக்கொடுக்க வேண்டிய குறள். இதன் பொருள்: தவறான வழியில் செயல்படுவதால் கிடைக்கும் செல்வத்தை விட, நேர்மையாக செயல்படுவதால் கிடைக்கும் வறுமையே உயர்ந்தது. இந்த குறள் குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்தால் பின்னாளில் தவறுகள் செய்வது பெருமளவு குறையும். வறுமையில் உழன்றாலும் பரவாயில்லை, ஊழல் செய்யக்கூடாது என்ற உயர்ந்த எண்ணம் வரும். பின்னாளில் தவறு செய்யும் வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் இந்த குறள் அவர்களை தவறு செய்யவிடாமல் கவசமாக நின்று காக்கும். சமூகத்தில் நேர்மையும், ஒழுக்கமும், அமைதியும் நிலவும்.


VARADARAJAN NARAYANASAMY
ஜூலை 25, 2024 16:33

Unnmaai


Sampath Kumar
ஜூலை 25, 2024 11:49

இந்த பழக்கம் ஆமினி பஸ் ஓட்டுநர்களிடம் நிறையவே உள்ளது சம்பாதிக்கும் ஆசையில் இப்படி செய்கிறார்கள் இதுக்கு என்ன காரணம் எல்லாம் நாம அதிகார குமபலின் சொல்லிக் கொடுத்தது தான் கோவிலில் சாமி பார்க்க தனி கட்டணம் அர்ச்சனைக்கு தனிக் கட்டணம் அவாளுக்கு தனியாக கவனித்தால் கடவுள் சிலை கிட்ட போய் பார்க்க அனுமதி ஆக எல்லாம் அதிகார கும்பலின் அர்ப்பணம் அப்புறம் ஏப்புடி நிறுத்தமுடியும் ஆசான் எந்த வழியோ மாணவனும் அந்த வழியே


duruvasar
ஜூலை 25, 2024 11:47

இரண்டு ஆளும்கட்சி கவுன்சிலர்களை கட்டி வைத்து உண்மையை சொல்ல சொன்னால் நன்றாக இருக்கும்.


V RAMASWAMY
ஜூலை 25, 2024 11:27

வள வளவென்று பேசிக்கொண்டிருக்கமால், வரும் சட்ட சபை தேர்தலில் தி மு க செய்யக்கூடிய வாக்காளர் லிஸ்டிலிருந்து பெயர்கள் நீக்கம் முதலிய தில்லு முல்லுகளை கண்டறிந்து அனைத்து தமிழ்நாட்டு நலம் விரும்பிகளும் ஒன்று சேர்ந்து இப்பொழுதிலிருந்து சரியான திட்டம் வகுத்து எச்சரிக்கையாக முன் நடவடிக்கைகள் எடுக்க முன்வரவேண்டும். திருட்டு தில்லுமுல்லு கட்சிகள் நீக்கப்பட்டால் தான் தமிழமும் மக்களும் முன்னேறுவார்கள். இல்லையெனில் அவர்கள் முன்னேறிக் கொண்டிருப்பார்கள், மக்களுக்கு பிசுக்கோத்து தான்.


கூமூட்டை
ஜூலை 25, 2024 10:55

இது சரியானது என்று சொல்லும் அறிவாளிகள் என்றாவது மக்களின் பணத்தைக்கொள்ளை அடிக்கும் ஊழல் வாதிதக்காளி நசுக்குமா?? வாழ்க ஊழல்


Ramamoorthy
ஜூலை 25, 2024 10:53

கரெக்ட் தி மு க இருக்கும் வரை தமிழ் Nadu உருப்படாது தி மு க வை ஒழிக்க வேண்டும் தமிழகத்தை விட்டு


Raj Kamal
ஜூலை 25, 2024 11:33

இப்படியே புலம்பி சாகவேண்டியதுதான். வேற ஒன்னும் ஆகப்போறதில்லை.


M Ramachandran
ஜூலை 25, 2024 12:25

பழனிச்சாமி இருக்கும் வரை திமுகவிற்கு கவலை இல்லை.


Ag Jaganath
ஜூலை 25, 2024 10:31

இதுதான் சட்டம் ஒழுங்கு. ரைட் திமுக சர்கார்


chennai sivakumar
ஜூலை 25, 2024 10:00

இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இந்த செய்தி படிக்கும் மற்ற ஓட்டுணர்களும் இது போல செயலில் ஈடு பட யோசிப்பார்கள். சும்மாவா சொன்னாங்க" அடி உதை உதவரார்போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி