மேலும் செய்திகள்
பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
17-Jul-2025
அன்னுார்; பூராண்டாம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நடும் பணி நடந்தது. பச்சாபாளையம் அருகே உள்ள பூராண்டாம் பாளையத்தில் பழமையான மாகாளியம்மன், மதுரை வீரன், சப்த கன்னிமார், கருப்பராயன், பட்டத்தரசி அம்மன், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வருகிற ஆக. 28ம் தேதி நடைபெற உள்ளது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். கோவில் வளாகத்தில் வேள்வி சாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடும் பணி நேற்று முன்தினம் நடந்தது. கணபதி ஹோமம் நடைபெற்றது. மாகாளி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கட்டளைதாரர்கள், திருப்பணி குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
17-Jul-2025