உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு துவக்க பள்ளியில் மகிழ் முற்றம் குழு துவக்கம்

அரசு துவக்க பள்ளியில் மகிழ் முற்றம் குழு துவக்கம்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் அரசு துவக்கப்பள்ளியில், மகிழ் முற்றம் குழு பதவியேற்பு விழா நடந்தது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு, வேற்றுமைகளைக் களைந்து குழு மனப்பான்மையுடன் செயல்படுதல், அனைவருக்கும் வாய்ப்பு வழங்குதல் ஆகியவற்றை முக்கிய நோக்கமாகக் கொண்டு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய பெயர்களில், மகிழ் முற்றம் குழுக்கள் அமைக்கப்படுகிறது.தொண்டாமுத்தூர் அரசு துவக்க பள்ளியில், மகிழ் முற்றம் குழு பதவியேற்பு விழா, நேற்று நடந்தது. தலைமையாசிரியர் சாரதா மதிப்பீட்டு பலகையை திறந்து வைத்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், குழு தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அக்குழுவின் கொடியை வழங்கினர்.தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியோர், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை