ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் மஹாருத்ர மஹா மங்கள வைபவம்
கோவை : ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், வரும் 29ல் மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடக்கிறது.இது குறித்து, கோதண்டராமஸ்வாமி தேவஸ்தான தலைவர் நாகசுப்ரமணியம் கூறியதாவது:கோவை ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், சமஸ்த பாபங்களை போக்கும் வகையில் கொலு வீற்றிருக்கும் ஆபத் சஹாய வில்வ லிங்கேஸ்வரரின் பரிபூர்ண அனுக்கிரஹத்தை பக்தர்கள் பெரும்வகையில், வரும் 29 காலை மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடக்கிறது.காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜை, மஹா சங்கல்பம், 7:30 க்கு மஹன்யாச ஜபம், ருத்ரஆவாஹனம், 9 மணிக்கு ஸ்ரீ ருத்ரஜெபம், ஏகாதச திரவிய ருத்ராபிஷேகம் ஆகியவை நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கோ பூஜையும், 11:00 மணிக்கு ஸ்ரீ ருத்ரஹோமமும், மதியம் 12:00 மணிக்கு வசோர்தாரையும், தம்பதிபூஜையும், மதியம் 12:30க்கு கலசாபிஷேகமும், மஹா தீபாராதனையும், பிரசாத வினியோகமும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ராம்நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டியினர், கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.