உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்

ராம்நகர் ராமர் கோவிலில் மஹாருத்ர மங்கள வைபவம்

கோவை, ;ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோவிலில், வேதவிற்பன்னர்கள் சிவாச்சாரியர்கள் சூழ மஹாருத்ரயக்ஞம் நேற்று நடந்தது.கோதண்டராமர் கோவிலில், சமஸ்த பாபங்களை போக்கும் வகையில், கொலு வீற்றிருக்கும் ஆபத்சஹாய வில்வலிங்கேஸ்வரரின், பரிபூர்ண அனுக்கிரஹத்தால் மஹாருத்ர மஹா மங்கள வைபவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், மஹன்யாச ருத்ரஜெபம், ருத்ரஆவாஹனம், ஏகதாச திரவிய ருத்ராபிஷேகம், கோபூஜை, ஸ்ரீ ருத்ரஹோமம், வசோர்தாரை, தம்பதிபூஜை மதியம் 12:30 மணிக்கு கலசாபிஷேகம், மஹாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தது.திரளான பக்தர்கள், ஸ்ரீ ருத்ரஹோமத்தில் பங்கேற்றனர். ஆபத்சஹாய வில்வலிங்கேஸ்வரரின் பரிபூர்ண அனுக்கிரஹம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ