மக்காச்சோள விவசாயிகள் மானியம் பெற அழைப்பு
கோவை: மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில், மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4600 மதிப்புள்ள வேளாண் இடுபொருட்கள் அடங்கிய தொகுப்பு, மானிய விலையில் வழங்கப்படுகிறது. இடுபொருள் தொகுப்பில் வீரிய மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள் அடங்கியிருக்கும். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் மற்றொரு இனமாக, வீரிய ஒட்டுரக விதைகள் டிஹெஎம் 206 கிலோவுக்கு ரூ.100 மானியமாக வழங்கப்படும். திட்டத்தில் பயன் பெற, விவசாயிகள் உழவர் செயலியிலோ அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தையோ அணுகி, இடு பொருட்கள் மற்றும் தொழில் நுட்ப அறிவுரைகளை பெற்று பயனடையலாம் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.