அழுகிய நிலையில் ஆண் சடலம்
போத்தனூர்; கோவை, கோவைபுதூர் அருகே அறிவொளி நகர் அடுத்த எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 59; குடிப்பழக்கமுடையவர். குடும்பத்தை பிரிந்து தனியே வசித்து வந்தார். நேற்று முன்தினம் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்தது. அருகே வசிக்கும் ராணி என்பவர் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜின் மனைவி சாந்தாமணிக்கு தகவல் தெரிவித்தார். சாந்தாமணி தனது சகோதரிகளுடன் சென்று கதவை திறந்து பார்த்தபோது, கட்டிலில் உடல் அழுகிய நிலையில் செல்வராஜ் இறந்து கிடப்பதை கண்டார். இவரது புகாரில் மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.