மேலும் செய்திகள்
விழிப்புணர்வு கூட்டம்
14-Nov-2024
கோவை: கோவை, வெள்ளகிணறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம், 55; சென்னை தி.நகரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவர், 2014ல், ஊட்டியில் சொகுசு காட்டேஜ் கட்டி விற்று வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் மாத வாடகையாக பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்தார்.அதைப்பார்த்து, சென்னையை சேர்ந்த இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ் என்பவர், கட்டுமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்தார். அவர் பல்வேறு தவணைகளாக, 1.45 கோடி ரூபாய் முதலீடு செய்தார்.பணத்தை பெற்ற சங்கரலிங்கம், கட்டுமான பணியை துவக்கவில்லை. இக்னேசியஸ் தாமஸ் சுரேஷ், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டும் பலனில்லை. அதனால், சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, கோவையில் பதுங்கியிருந்த கட்டுமான நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.
14-Nov-2024