உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்ப உதவுவதாக மோசடி செய்தவர் கைது

வெளிநாட்டு வேலைக்கு ஆட்கள் அனுப்ப உதவுவதாக மோசடி செய்தவர் கைது

கோவை : கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனியார் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். இந்நிறுவனம் மூலம் உக்ரைன், குரேசியா, போலந்து, செர்பியா ஆகிய நாடுகளுக்கு பலரையும் வேலைக்காக அனுப்பி வருகிறார். இவருக்கு ஒருவர், முகநுாலில் விளம்பரம் ஒன்றை அனுப்பினார். அதைப்பார்த்த அப்பெண், அந்நபரை தொடர்பு கொண்டார். குறைந்த செலவில், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக ஆட்களை அனுப்ப உதவுவதாக, அவர் தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய பெண், குஜராத் ஆனந்த் பகுதியில் அந்நபர் நடத்தி வருவதாக கூறிய, 'சன்ஸ்டெல்லர்' என்கிற நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்து கொண்டார்.விசா நடைமுறைகள், பணி அனுமதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள, அந்நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு, பல்வேறு தவணைகளில் ரூ.64 லட்சம் அனுப்பியுள்ளார். அந்நபர் கொடுத்த ஆவணங்களை கொண்டு விசா பெற முயற்சித்தபோது, அவை போலி எனத் தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.விசாரணையில், குஜராத் மாநிலம், ஆனந்த், காம்பாத் பகுதியை சேர்ந்த முகமது இர்பான் ஷேக், 25 உள்ளிட்ட இருவர் மோசடியில் ஈடுபட்டதும், குஜராத்தில் அவர் நடத்தி வந்ததாக கூறப்பட்ட நிறுவனம் போலி என்பதும் தெரிந்தது. குஜராத் சென்ற போலீசார், முகமது இர்பான் ஷேக்கை கைது செய்து, கோவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி