உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

போத்தனூர்; கோவை, கோணவாய்க்கால்பாளையத்திலுள்ள டாஸ்மாக் பார் ஊழியர் மும்மூர்த்தி, 53. நேற்று முன்தினம் ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்றார். அங்கு நின்றிருந்த ஒருவர் கத்தியை காட்டி, மிரட்டி அவரது பாக்கெட்டிலிருந்த, 300 ரூபாயை பறித்தார். இவரது புகாரின்படி, போத்தனூர் போலீசார் விசாரித்து, கோணவாய்க்கால்பாளையம், குரும்பர் வீதியை சேர்ந்த கார்த்திக், 33 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !