உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

கருமத்தம்பட்டி ; கருமத்தம்பட்டி புதூரில், வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தேனி மாவட்டம், தேவதான பட்டியை சேர்ந்தவர் ரபீக், 41. தற்போது கருமத்தம்பட்டி புதூர் விநாயகர் கோவில் அருகில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார். கஞ்சாவுக்கு அடிமையான ரபீக், கஞ்சா கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளார். கஞ்சா செடி விதைகளை, குடியிருக்கும் வீட்டுக்கு அருகில் இருந்த காலி இடத்தில் தூவியுள்ளார். அதில், ஒரு செடி, நாலரை அடி உயரத்துக்கு வளர்ந்தது. அதில் இருந்து இலைகளை எடுத்து காயவைத்து புகைத்து வந்தார்.வித்தியாசமான வாசம் வந்ததால், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற கருமத்தம்பட்டி போலீசார் சோதனை செய்தனர். கஞ்சா செடி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். ரபீக்கை கைது செய்து விசாரித்ததில், கடந்த, மூன்று மாதத்துக்கு முன் கருமத்தம்பட்டி புதூருக்கும் வந்ததும், சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு வழக்கு உள்ளதும் தெரிந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ