அலுவலக பணம் கையாடல் செய்தவர் கைது
அன்னுார்; ஆன்லைன் நிறுவன பணத்தை கையாடல் செய்தவர் கைது செய்யப்பட்டார். அன்னுாரில் 'இன்ஸ்டா கார்ட்' என்னும் ஆன்லைன் டெலிவரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.ஆன்லைன் வாயிலாக புக்கிங் செய்யப்படும் பொருட்களை இந்த நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது.இதில் பணிபுரியும் மூக்கனுாரைச் சேர்ந்த துாயமணி, 38. என்பவர் பொருட்கள் டெலிவரி செய்தபோது பயனாளியிடமிருந்து பெற்ற பணத்தை அலுவலகத்திற்கு செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார்.நிறுவன மேலாளர் சரவணன் இதுகுறித்த ஆய்வு செய்தபோது நான்கு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னுார் போலீசார் தூய மணியை கைது செய்தனர்.