உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

திருமணம் செய்ய மறுத்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது

கோவை: திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை, டாடாபாத் பகுதியை சேர்ந்தவர் 30 வயது பெண். இவரை கோவை, சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர், 38 என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், அப்பெண் அவர் வீட்டு முன் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சந்திரசேகர், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அந்த பெண் கண்டித்தார். அப்போது, இருவருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.சந்திரசேகர் அப்பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். பெண் வீட்டுக்குள் சென்று தனது சகோதரரிடம் நடந்ததை கூறினார். பெண்ணின் சகோதரர், சந்திரசேகரை தட்டி கேட்டார்.அதற்கு அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காண்பித்து, இருவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார்.சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சந்திரசேகரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ