உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 6 பைக்குகள் திருடியவர் கைது

6 பைக்குகள் திருடியவர் கைது

சூலுார்; சூலுார் எஸ்.ஐ., முருகானந்தம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பதிவு எண் இல்லாத பைக்கை ஓட்டி வந்த வாலிபரை நிறுத்த முயன்றார். அந்த வாலிபர், பைக்கை நிறுத்தாமல் சென்றார். போலீசார் துரத்தி சென்றபோது, காங்கயம் பாளையம் அருகே வண்டியை நிறுத்தி விட்டு தப்ப முயன்ற வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், சாமளாபுரத்தை சேர்ந்த தேவா, 18, தனது இரு கூட்டாளிகளான சிறுவர்களுடன் சேர்ந்து, திருடியது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி