லிப்ட் கேட்டு வண்டி திருடிய நபர் கைது
சூலூர் அடுத்த மாதப்பூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ், 39. இவர் தனது மொபட்டில் சூலூர் சென்றார். அப்போது, அவ்வழியே வந்த நபர், சூலூர் வரை வருவதாக லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்றி கொண்டு சூலூர் சென்றார். சிறுநீர் கழிக்க மொபட்டை நிறுத்தி உள்ளார் ரமேஷ். அப்போது, வண்டியை அந்த நபர் திருடிக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்நபரை தேடினர்.கரடிவாவி புதூரை சேர்ந்த முருகேசன் மொபட்டை திருடியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் மொபட்டை மீட்டனர்.