மேலும் செய்திகள்
தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி
21-Oct-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தாமரைக்குளம் அருகே, திருடப்பட்ட பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைகுளத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 64, தனியார் கம்பெனி பணியாளர். கடந்த வாரம் தனது வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த பைக் திடீரென காணாமல் போனது. பைக்கை, அருகாமையில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதியில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிந்து போலீசார் பைக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு செக் போஸ்ட் பணியில், ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்துக்கு இடமாக பைக் ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அது மோகன்ராஜின் பைக் என உறுதியானது. பைக்கை திருடியது தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், 35, கூலித்தொழிலாளி என்பதும், ஏற்கனவே இவர் மீது நான்கு திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
21-Oct-2025