உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காய்கறி கடையில் பணம் திருடியவர் கைது

காய்கறி கடையில் பணம் திருடியவர் கைது

நெகமம்; நெகமம் பகுதியில் உள்ள காய்கறி கடையில் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.நேபாளத்தை சேர்ந்தவர் நெகமம் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரது, 17 வயது மகன், நெகமத்தில் உள்ள கோழிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று கோழிக்கடைக்கு அருகில் உள்ள, ஷேக் அலாவுதீன் என்பவருக்கு சொந்தமான காய்கறி கடைக்குள் புகுந்து பணம் திருடியதாக தெரிகிறது.கடையில், 1,500 ரூபாய் பணம் குறைவாக இருப்பதை கவனித்த ஷேக் அலாவுதீன், சி.சி.டி.வி., கேமரா பதிவு காட்சிகளை பார்த்தபோது, நேபாளத்தை சேர்ந்த சிறுவன் பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, நெகமம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார், சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர். நெமகத்தில் உள்ள கடையில், பணம் திருடியதாக சிறுவன் மீது ஏற்கனவே வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ