அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது
சூலுார் : ராசிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 25. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, தனது அண்ணன் கனகராஜூடன் பைக்கில் கணியூர் சென்றார்.அவர்களை தடுத்து நிறுத்திய நபர், அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளார். ஆட்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பினார்.புகாரையடுத்து, சூலுார் போலீசார், கொள்ளு பாளையத்தை சேர்ந்த சந்தனகுமார், 21, என்பவரை கைது செய்தனர்.