உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் கடை ஊழியர் மீது கத்தியை வீசியவர் கைது

மொபைல் கடை ஊழியர் மீது கத்தியை வீசியவர் கைது

வால்பாறை; வால்பாறை நகர் காந்திசிலை வளாகத்தில் உள்ள தனியார் மொபைல் கடையில், வேலை செய்து வருபவர், பாலமுருகன். இவர் கடையில் பணி செய்து கொண்டிருந்த போது, பாரளை எஸ்டேட்டை சேர்ந்த பிரவின்குமார், 27, என்பவர் மொபைல்போன் டிஸ்பிளேக்கு ஸ்டிக்கர் ஒட்டித்தருமாறு அவரது மொபைலை வழங்கினார்.ஸ்டிக்கர் ஒட்டிய பின் பணம் தர மறுத்ததால், கடை ஊழியர் மொபைல்போன் தரமுடியாது எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவின்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை, மொபைல்கடை ஊழியர் பாலமுருகன் மீது வீசியதில், இடது பக்க காதின் அருகில் ரத்தக்காயம் ஏற்பட்டது.காயமடைந்த அவருக்கு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து, கடை உரிமையாளர் ஆண்ட்ரூஸ் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவின்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை