உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது

 பஸ்சில் காலை மிதித்தவருக்கு அடி, உதை; இருவர் கைது

போத்தனூர்: சுகுணாபுரம் கிழக்கு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் உசேன், 40; பழைய இரும்பு வியாபாரி. கடந்த, 11ல் பிள்ளையார்புரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து, சுகுணாபுரம் செல்ல மினி பஸ்சில் ஏறினார். அதில், இவருக்கு பழக்கமான அதே பகுதியை சேர்ந்த, 18 வயதுடைய மூவர்பயணித்தனர். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எதிர் பாராவிதமாக உசேன், மூவரில் ஒருவரின் காலை மிதித்துவிட்டார். அந்நபர் உசேனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பஸ் கண்டக்டர் நால்வரையும் இறக்கி விட்டு விட்டார். கீழே இறங்கிய பின், அந்நபர் உசேனை தாக்கினார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்தோர் அங்கு வரவும், அந்நபர் அங்கிருந்து நண்பர்களுடன் சென்று விட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உசேன், புகாரில் குனியமுத்தூர் போலீசார் விசாரித்து, இருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ