உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி

குடிநீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் குடிநீர் என நினைத்து, ஆசிட் குடித்த தொழிலாளி இறந்தது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி மாரப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சாமி என்கிற சீனிவாசன்,60. இவர், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த சில நாட்களுக்கு முன், தாகத்தை தணிக்க, குடிநீர் என நினைத்து அங்கு பாட்டிலில் இருந்த ஆசிட்டை குடித்தார்.இதனால், வயறு வலி, எரிச்சல் தாங்க முடியாமல் அலறினார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி