மேலும் செய்திகள்
தடம் கேட்டு சாலை மறியல்
12-Jul-2025
கோவை; பூட்டிய வீட்டில் உயிரிழந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கணபதி கிருஷ்ணராஜ் காலனி , சித்தா தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில் குமார், 50. இவரது மனைவி சண்முகவள்ளி, 45. செந்தில்குமார், வீட்டுக்கு அருகில் நகை பாலிஷ் போடும் கடை நடத்தி வந்தார். சண்முகவள்ளி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வருகிறார்.நேற்று முன்தினம் காலை, சண்முகவள்ளி வேலைக்கு சென்று விட்டார். செந்தில் குமார் குழந்தைகளை பள்ளியில் விட்டு, விட்டு வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த சண்முகவள்ளி, வீடு உட்புறம் தாளிடப்பட்டு இருப்பதை கண்டார்.கதவை தட்டியும் திறக்கவில்லை. அருகில் இருந்தவர்கள் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செந்தில்குமார் தரையில் கிடந்தார். அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.இதுகுறித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
12-Jul-2025