மேலும் செய்திகள்
முன்விரோதத்தால் கத்திக்குத்து
18-Dec-2024
கோவை; சுங்கம், சிந்தாமணியை சேர்ந்தவர் குணசேகரன், 47. இவர்தனது தாய், தம்பி மற்றும் தம்பி மகளுடன் சிந்தாமணி காமராஜ்நகரில் வசித்து வருகிறார். குடிபழக்கம் இருக்கும் குணசேகரன் மதுபோதையில் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மதுபோதையில் இருந்த குணசேகரன், அவரின் தம்பி மகளான மதுமிதாவிடம், 22 தகராறு செய்துள்ளார். மதுமிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். தடுக்க வந்த மதுமிதாவின் தந்தை, பாட்டியையும் தாக்கினார். மதுமிதா ராமநாதபுரம் போலீசில் புகார் அளிக்க, போலீசார் குணசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
18-Dec-2024