உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

கோவை: கோவை காந்திபார்க் மதுரைவீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகேசன், 45. சுமை துாக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறிந்த வாலிபர் ஒருவர் மதுக்குடிக்க பணம் கேட்டுள்ளார். முருகேசன் மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மிரட்டி, முருகேசனின் சட்டைப்பையில் இருந்த ரூ.500 ஐ பறித்து தப்ப முயன்றார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அங்கு வந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், கத்தியை காட்டி மிரட்டி அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார். முருகேசன் புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணப்பறிப்பில் ஈடுபட்டது காந்திபார்க் தடாகம் ரோட்டை சேர்ந்த ஆகாஷ், 21 எனத் தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை