உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை

பெண்ணிடம் 7 சவரன் நகை பறித்தவருக்கு சிறை

கோவை, ; வயதான பெண்ணிடம் ஏழு சவரன் நகை பறித்த ஆசாமிக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, கணபதி, செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் இருதய பிச்சைக்கண்ணு,75; கடந்த 2017, ஜூலை 20ல், அங்குள்ள ரயில்வே தண்டவாளம் அருகிலுள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த புலியகுளம், கந்தசாமி வீதியை சேர்ந்த அபிலாஷ்,34, பிரபு ஆகியோர், மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த, ஏழு சவரன் தாலி செயினை பறித்து தப்பினர். புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், பிரபு இறந்து விட்டதால், அபிலாஷ் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட அபிலாஷூக்கு, ஓராண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் மலர்க்கொடி ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை