மேலும் செய்திகள்
டூவீலர்---வேன் மோதல்: பாட்டி, பேரன் பலி
19-May-2025
கோவை: போத்தனூர், கார்மல் நகரை சேர்ந்தவர் கஜேந்திரன்; மனைவி சத்தியகலா, 42. இவர்கள் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜபிரகாஷ், 29 என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் ராஜபிரகாஷ், சத்தியகலாவின் வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்ததை பார்த்த சத்தியகலாவின் தந்தை, அவரிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த சத்தியகலா, ராஜபிரகாசை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜபிரகாஷ், தகாத வார்த்தைகளால் திட்டி சத்தியகலாவை தாக்கினார். சத்தியகலா சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜபிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
19-May-2025