உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாம்பிராணி போட பெட்ரோல் ஊற்றியவர் தீப்பற்றி பரிதாப பலி

சாம்பிராணி போட பெட்ரோல் ஊற்றியவர் தீப்பற்றி பரிதாப பலி

கோவை; பேரனுக்கு சாம்பிராணி போட, தீ பற்ற வைத்தபோது ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தார்.பாப்பநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்; இவரது மனைவி ராஜலட்சுமி, 49. இவர் கடந்த 14ம் தேதி தனது பேரனை குளிக்க வைத்து விட்டு சாம்பிராணி காண்பிப்பதற்காக கரி துண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு தீப்பற்ற வைக்க முயன்றார்.அதில் பெட்ரோலை ஊற்றியபோது, பெட்ரோல் ராஜலட்சுமி மீது பட்டு தீப்பிடித்தது. இதைப்பார்த்த ராஜலட்சுமியின் குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ