மேலும் செய்திகள்
ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை
28-Dec-2025
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஐயப்ப சுவாமி கோவில்களில் மண்டல பூஜை வழிபாடு நடந்தது. *கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம்ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில், சுவாமிக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. பின், சுவாமி திருவீதி உலா நடந்தது. இதில், பக்தர்கள் பலர் சரண கோஷங்களை முழங்கி சுவாமியை தரிசனம் செய்தனர். இறுதியில், ஐயப்ப பஜனை பாடல்கள் பாடி விழா நிறைவுற்றது. *பெரியாக்கவுண்டனூர், ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்த மண்டல பூஜை நிகழ்ச்சியில், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, ஐயப்ப பக்தர்கள், சுவாமிக்கு பஜனை பாடல்கள் பாடி, படி பூஜை செய்தனர். இதில் பெரியக்கவுண்டனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். *பொள்ளாச்சி வெங்கடேசா காலனி ஐயப்ப சுவாமி கோவில் மண்டல பூஜை தினத்தில், மகேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின் பஞ்ச வாத்தியத்துடன், மலர் அலங்காரத்தில் நகரின் முக்கிய பகுதிகளில் வானவேடிக்கையுடன், ஐயப்ப சுவாமி, பரிகார மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். *பொள்ளாச்சி, குள்ளக்காபாளையம் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில், சபரிமலை முன்னாள் மேல் சாந்தியும், கோவில் தந்திரியுமான சசி நம்பூதிரி மற்றும் கோவில் தலைமையில், அர்ச்சகர் மகேஸ்வர பிரபு ஜோதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் மண்டல பூஜை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் நடந்தது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர். * மெட்டுவாவி தர்ம சாஸ்தா கோவிலில் நடந்த மண்டல பூஜை விழாவில், ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள், படி பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், மெட்டுவாவி சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
28-Dec-2025