உலக மக்கள் நலனுக்காக மங்கள சதசண்டி யாகம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டி யாகம் நடைபெற்று வருகிறது.பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி ம ேஹஸ்வரியம்மன் கோவிலில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டியாகம், மஹா ருத்ர யாகம், மஹா நாராயண (லட்சுமி நாராயண) யாகம், கடந்த, 20ம் தேதி முதல் நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது.வரும், 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், விஷ்ணு ஸூக்த ேஹாமம், மஹா சண்டி மஹாயாக பிரகனம், மஹாசண்டி சப்தசதி அத்யாய ேஹாமம், மஹா பூர்ணாஹுதி, வேதிகார்ச்சனை, மஹா தீபாராதனை, கலச தீர்த்த வினியோகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.