உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நேஷனல் மாடல் பள்ளி சார்பில் மராத்தான்

நேஷனல் மாடல் பள்ளி சார்பில் மராத்தான்

கோவை; நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளி, தனது 20ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு மராத்தானை நடத்தியது. ' ஒரு வாழ்வு, ஒரு பூமி - நேஷனல் மாடலுடன் பசுமைக்கு மாறுவோம்' என்ற கருப்பொருளில், உடற்தகுதி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மராத்தான் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கோவை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மராத்தானை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் நிர்வாக இயக்குநர் மோகன் சந்தர், செயலாளர் உமா, முதல்வர் கீதா, துணை முதல்வர் லாவண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ