உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுமியுடன் திருமணம்; கலெக்டரிடம் புகார்

சிறுமியுடன் திருமணம்; கலெக்டரிடம் புகார்

கோவை; சிறுவாணி சாலை பெருமாள் கோவில் பதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 39. இவர் தொண்டாமுத்துாரை சேர்ந்த, 14 வயது சிறுமியை வீட்டில் வைத்து உறவினர்கள் முன்னிலையில், சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சில உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சிறுமியின் உறவினர்கள், இந்த திருமணத்துக்கு காரணமான ராமகிருஷ்ணனின் சகோதரிகளையும், அவர்களது நெருங்கிய உறவினர்களையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து, கைது செய்ய வலியுறுத்தி, கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !