கடைகள் அமைக்க மேயர் ஆய்வு
கோவை, : மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில், மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார். செல்வபுரம், கல்லாமேடு பகுதிகளில் சேதமடைந்துள்ள மழைநீர் வடிகால்களை உடனடியாக சரிசெய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தியாகி குமரன் மார்க்கெட் பகுதியில் அகற்றப்பட்ட, 86 கடைகளுக்கு பதிலாக, தற்காலிக கடைகள் அமைக்க, வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அங்கு கடைகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.