ஆட்டோ கவிழ்ந்து மெக்கானிக் பலி
பாலக்காடு: பாலக்காடு அருகே, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் மெக்கானிக் உயிரிழந்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் எலப்புள்ளி குன்னுகாடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் ஜஸ்டின் பெர்ணான்டஸ், 44. இவர் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் வேலை முடித்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது பாறை என்ற இடத்தில், திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டு படுகாயமடைந்த அவரை, அப்பகுதி மக்கள் பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவர் உயிரிழந்தார். புதுச்சேரி (கசபா) போலீசார் மேல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.