சாலை விபத்தில் மெக்கானிக் பலி
சூலுார்; சுல்தான்பேட்டை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 27. இரு சக்கர வாகன மெக்கானிக். இவர் தனது நண்பரான கோபிநாத் மற்றும் உறவினரான கோபால கிருஷ்ணனுடன் இரு பைக்குகளில் வாரப்பட்டி சென்றனர். இரவு வீட்டுக்கு திரும்பும் போது, ஒருவருக்கு ஒருவர் முத்திக்கொண்டு பைக்குகளை ஓட்டியதாக கூறப்படுகிறது. அப்போது, கோபிநாத்தின் பைக், ஹரி பிரசாத் பைக் மீது மோதியதில், இரு பைக்குகளும் அருகில் இருந்த மரத்தில் மோதின. இதில், பலத்த காயமடைந்த ஹரிபிரசாத் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.