| ADDED : நவ 20, 2025 05:30 AM
பொள்ளாச்சி: ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், 18 வயது வரையான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா முகாமினை துவக்கி வைத்தார். வடக்கு வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் ஸ்வப்னா தலைமை வகித்தார். கல்வி மாவட்ட தொடக்க நிலை அலுவலர் பாரதி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வடிவேல் முருகன் பங்கேற்றனர். இதில், 147 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெற்றனர். மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பாக, 15 நபர்களுக்கு மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. யுடிஐடி, ஐந்து பேருக்கும், அறுவை சிகிச்சை, இரண்டு பேருக்கும்; இன்சூரன்ஸ், 18 பேருக்கும் வழங்க பரிந்துரை செய்து வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை டாக்டர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியர்கள், உதவியாளர் பங்கேற்றனர்.