ஓட்டல் பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம்
கோவை, ; ஓட்டல்களில் உணவு தயாரிப்பவர்கள், பரிமாறுபவர்கள் அனைவருக்கும் கட்டாயம் மருத்துவ தகுதி சான்றிதழ் பராமரிக்கப்பட வேண்டும்.இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறியதாவது:n ஓட்டல்கள் உணவு தயாரிப்பது மட்டுமல்ல, உணவு கொள்முதல் செய்வது முதல் இறுதிகட்டமாக உணவு கழிவுகளை அப்புறப்படுத்துவது வரை, அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும்.n புகாரின் தன்மை பொறுத்து, 1,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், உரிமம் ரத்து செய்தல், வழக்கு பதிவு, சிறை தண்டனை என பாதிப்புகளை பொறுத்து, நடவடிக்கையின் தன்மை இருக்கும்.n எந்த விதமான உணவகமாக இருப்பினும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும். உணவகம் சுத்தமாக, காற்றோட்டமாக, வெளிச்சம், புகைப்போக்கி, உரிய இடவசதியுடன் விதிமுறைப்படி இருக்க வேண்டும்.n அசைவம், சைவ உணவுகளை, உரிய வெப்பநிலையில் வைக்க வேண்டும்.n உணவு கையாள்பவர்கள், நகம் வெட்டி இருப்பது, குளிப்பது, பூ வைக்கவோ, வளையல் அணியவோ கூடாது. தலையுறை, கையுறை அணிந்திருக்க வேண்டும்.n தொற்றுநோய், தோல்நோய், போன்ற பாதிப்பு உள்ளவர்கள் பணியில் இருக்கக்கூடாது. பணியாளர்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.n பயன்படுத்தும் பாத்திரம், பொருட்களின் தரம், சுத்தம் உறுதிப்படுத்த வேண்டும்.மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வழங்குவதை ஓட்டல் நிர்வாகிகள் உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்று பின்பற்றாத பட்சத்தில், பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.