மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
07-Jul-2025
கோவை : கோவை கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத்துறை சார்பில், மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.கலெக்டர் அலுவலக தரைதளத்தில் நடந்த, இந்த முகாமை கலெக்டர் துவக்கி வைத்தார். சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, நோய் தடுப்பு மற்றும் மருந்துத்துறை பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.உடலின் ரத்தத்திலுள்ள குளூக்கோஸ் அளவு, ரத்தஅழுத்தம், கண்பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, இ.சி.ஜி., காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட கருவூலம், கலெக்டரிடம் நேர்முக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்துதுறை பணியாளர்கள் பங்கேற்றனர்.
07-Jul-2025