உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி மாணவர்களுக்கு தியான பயிற்சி முகாம்

கல்லுாரி மாணவர்களுக்கு தியான பயிற்சி முகாம்

வால்பாறை; வால்பாறை அரசு கலைக்கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு, போதை பொருள் பயன்பாடால் ஏற்படும் பாதிப்பு மற்றும் தியான பயிற்சி முகாம் நடந்தது.வால்பாறை அரசு கலைக்கல்லுாரில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஜோதிமணி தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், பொள்ளாச்சி ஸ்ரீராம்சந்திர மிஷன் தருண்நேரு கலந்து கொண்டு மாணவர்களுக்கு. தியானத்தின் வாயிலாக மனதை ஒருநிலைப்படுத்தலாம் என்பது குறித்தும், பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிகாரிகள் பேசினர்.கல்லுாரி மாணவர்கள், மனதை ஒருநிலைப்படுத்தினால், கல்வியில் கவனம் செலுத்த முடியும். இதனால், வளமான எதிர்காலம் அமையும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதேபோன்று, போதையின் பாதையில் செல்லாமல், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மொபைல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப பேராசிரியர் அபிராமன், ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் செல்வசேகர், தியான பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை