உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு

கோவை; கோவை ரத்தினம் கல்விக்குழுமம் மற்றும் மலேசியா யு.எஸ்.ஐ.எம்., பல்கலை இணைந்து, சர்வதேச அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு, கல்லுாரி அரங்கில் நடந்தது. ஒப்பந்த கோப்புகளில், யு.எஸ்.ஐ.எம்., பல்கலை பேராசிரியர் சுந்தரேசன் மற்றும் ரத்தினம் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவர் நாகராஜ் கையெழுத்திட்டு, மாற்றிக்கொண்டனர்.கல்வி மற்றும் ஆராய்ச்சிகளில், ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்விரு கல்வி நிறுவனங்கள் சார்பில், சர்வதேச மாநாடுகள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கல்வி பரிமாற்றம், இணையவழி மற்றும் நேரடி பயிற்சி பட்டறைகள் என, பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை