உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை மீட்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண், குழந்தை மீட்பு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட பெண், அவரது குழந்தையை மீட்டு, குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது. இந்த பெண், குழந்தையை துாக்கி கொண்டு, பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் சென்று உணவு சேகரிப்பது, யாசகம் கேட்பதுமாக இருந்தார். இதை கண்ட பொள்ளாச்சி வக்கீல்கள் சிவரஞ்சனி, இமயவரம்பன் ஆகியோர், குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் நல இலவச தொலைபேசி எண்களான, 181, 1098க்கு அழைத்து தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் சுற்றி வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, குழந்தையுடன் மீட்ட வக்கீல்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி