மேலும் செய்திகள்
வாழும் கலை பயிற்சி மையம் சார்பில் தியானம்
22-Dec-2024
அன்னுார் : அன்னுாரில் மனவளக்கலை யோகா பயிற்சி வகுப்பு வரும் 23ம் தேதி துவங்குகிறது.அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா என்னும் பயிற்சி சொக்கம்பாளையத்தில் வரும் 23ம் தேதி துவங்குகிறது. சொக்கம்பாளையம் தவம் மையத்தில் வரும் 23ம் தேதி மாலை 5:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. 14 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம்.இதில் எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் கற்பிக்கப்படும். பயிற்சி பெறுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திலும், சமூகத்திலும், மனித உறவுகளிலும், அமைதியும் இனிமையும் பெருகும்.அறிவுத்திறனை பெருக்கி, ஒழுக்க பழக்கங்கள் மேம்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு, அன்னுார் மன்றத்தில், தினமும் மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரை, தியானமும், சிந்தனை உரையும் நடைபெறுகிறது.'மேலும் விவரங்களுக்கு, 94435 60525 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்
22-Dec-2024