வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது மட்டுமா கொஞ்ச காலத்தில் மருதமலையே காணாமல் போய் விடும்
தொண்டாமுத்தூர்; கனிமவள கொள்ளையை தடுப்பது தொடர்பாக, அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு பெயரளவுக்கு மட்டுமே செயல்படுவதாக, புகார் எழுந்துள்ளது. பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், மலை அடிவாரத்தை ஒட்டிய பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில், சட்டவிரோதமாக மண் கொள்ளை நடந்தது. இதனை தடுக்க, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட நீதிபதி மற்றும் கலெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். சட்டவிரோதமாக மண் அள்ளியது உறுதி செய்யப்பட்டது. இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சென்னை உயர்நீதிமன்றம், சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. விசாரணை நடத்திய அக்குழுவினர், அரசு அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்தனர். கனிமவளக்கொள்ளையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து, பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் மண் கடத்தலை தடுக்கும் வகையில், வருவாய்த்துறையினர், போலீசார், வனத்துறையினர், வட்டார போக்குவரத்து அலுவலகம், கனிமவளத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப் பணித் துறையினர் அட ங்கிய, வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், நாள்தோறும், பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில், இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே, இக்குழுவின் இரவு ரோந்து பணியில், வருவாய்த்துறையினர் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். மற்ற துறை அலுவலர்கள், ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. இதனால், வட்டார கண்காணிப்பு குழு பெயரளவிற்கு மட்டுமே செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது மட்டுமா கொஞ்ச காலத்தில் மருதமலையே காணாமல் போய் விடும்