உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எட்டு வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி

எட்டு வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க அனுமதி

சூலுார்; கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், எட்டு வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், எட்டு வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 105 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அதில், 14 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அனுமதி உத்தரவை கலெக்டர் பவன்குமார் வழங்கினார். போக்குவரத்து அலுவலர்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். சூலுார் பெருமாள் கோவிலில் இருந்து அமர்ஜோதி நகர், கண்ணம்பாளையம், கலங்கல் பிரிவு, அப்பநாயக்கன்பட்டி புதூர் பிரிவு வழியாக பாப்பம்பட்டி ஒரு மினி பஸ்சும், சூலுார் எஸ்.எல்.வி., நகர் அரசு பள்ளியில் இருந்து, மதியழகன் நகர், புது நகர், செங்கத்துறை, மாதப்பூர் அண்ணா நகர் வழியாக கணியூர் வரை ஒரு மினி பஸ்சும் இயக்கப்பட உள்ளது. இதேபோல், அரவான் கோவிலில் இருந்து எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி, எல்.ஜி., நகர், எல் அண்ட் டி பை- பாஸ் ரோடு, பட்டணம் பிரிவு, வெள்ளலுார் பிரிவு வழியாக கள்ளப்பாளையத்துக்கு ஒரு மினி பஸ்சும் இயக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை