மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்து முதியவர் பலி
23-Jan-2026
சிறுமுகை: சிறுமுகை அருகே ஆலங்கொம்பு பகுதியில் வெங்கடசாமி என்பவர் தனது மனைவி சரோஜா, 65, உடன் வசித்து வந்தார். சரோஜா சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இரு நாட்களுக்கு முன், அதே பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வெங்கடசாமி சென்று, டிபன் வாங்கிவிட்டு, வீடு திரும்பினார். அப்போது மனைவியை காணவில்லை. அருகில் உள்ள பகுதிகளில் தேடியபோது, தோட்டத்து கிணற்றில் விழுந்து சரோஜா இறந்து கிடப்பது தெரிந்தது. தீயணைப்பு துறையினர், போலீசார் உடலை மீட்டனர். சிறுமுகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23-Jan-2026