உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பர்னிச்சர் வாங்குவது போல் மொபைல் போன்கள் திருட்டு

பர்னிச்சர் வாங்குவது போல் மொபைல் போன்கள் திருட்டு

கோவை: கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன், 52. கணபதி கணேஷ் லே-அவுட்டில் தங்கி, சிவானந்தபுரத்தில் உள்ள தனது சகோதரியின் பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு, பர்னிச்சர் வாங்க ஒருவர் வந்தார். அங்கிருந்த டீபாய்களை பார்த்த அவர், விலை குறித்து விசாரித்தார். அவரிடம் பர்னிச்சர் குறித்து விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்நபர் மனோகரன் மற்றும் கடையின் செக்யூரிட்டி ஆகியோரின் மொபைல்போன்களை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். இதைப்பார்த்த மனோகரன், சத்தமிட்டு, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்நபரை பிடித்து, சரவணம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். விசாரணையில், அவர் ஊட்டியை சேர்ந்த தினேஷ்குமார், 32 எனத் தெரிந்தது. அவரிடமிருந்து இரு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ